தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளும் கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டியுள்ள மாவாட்டங்களில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் நாளும் கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டியுள்ள மாவாட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 22 முதல் 24 வரை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவையில் மலைப்பகுதிகளில் இரவில் உறைபனி நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கில் இருந்த பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் கடற்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: