×

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். மக்கள் நலன், தமிழ்நாட்டு நலன் என்ற அடிப்படையில் ஜி.கே.வாசனின் முடிவு வரவேற்கத்தக்கது.

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. என்றும் கூறினார்.

Tags : erod ,congress ,jayakumar , Only AIADMK can counter Congress in Erode East: Former AIADMK minister Jayakumar
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...