×

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கர்ப்பிணிகள் உள்பட 33,000 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விபத்து, வனவிலங்குகள் தாக்கி காயமடைந்தோர் உள்பட மொத்தம் 33 ஆயிரம் பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர். இதில் 14 ஆயிரத்து 973 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக அழைத்து செல்வது போன்ற அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. அவசர காலத்தில் உதவும் மருத்துவ சேவையான 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களின் உயிரை காப்பாற்றியதில் சேவையாற்றி இருக்கிறது. இச்சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. சமவெளி பகுதி மாவட்டங்களை காட்டிலும் மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், ஏழை எளிய கூலி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் அதிக முக்கியவத்துவம் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 37 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் குறுகலான சரிவான பகுதி மற்றும் சாலை வசதிகள் இல்லாத பழங்குடியின கிராமங்களுக்கு செல்ல வசதியாக உள்ள 8 ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ்களும் அடங்கும். இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 33 ஆயிரத்து 4 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பயனடைந்துள்ளனர். இதில் 14 ஆயிரத்து 973 கர்ப்பிணிகளும் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகளை பிரவசத்திற்காக அழைத்து செல்லும் போது 31 பேருக்கு பாதி வலியிலேயே பிரவச வலி ஏற்பட்டு ஆம்புலன்சிலேயே பிரசவம் நடந்துள்ளது. பிரசவத்திற்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்க்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். உதாரணமாக, கடந்த ஆண்டு ெதன்மேற்கு பருவமழையின் போது கூடலூரில் இருந்து கர்ப்பிணி ஒருவரை பிரவசத்திற்காக ஊட்டி அழைத்து வரும் போது, பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக நடுவட்டம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. அச்சமயத்தில் அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்சிலேயே அவசர கால பணியாளர்கள் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக அழைத்து செல்ல சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வருவதற்கு முன்பே பிரசவ வலி ஏற்பட்டவர்களுக்கும் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு 65 பேருக்கு பிரவசம் பார்க்கப்பட்டுள்ளது. இதுதவிர சாலை விபத்துகளை சிக்கிய 1328 பேர் உடனுக்குடன் மீட்கப்பட்டு குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அவசர ேதவைக்காக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்ட நேரத்தில் இருந்து நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு 17.12 நிமிடத்திற்குள் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் செல்வ முத்துகுமார் மேலும் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் பயனடைந்தோர் மொத்தம் 33 ஆயிரத்து 4 பேர் ஆவார்.

இதில் 14 ஆயிரத்து 973 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தினால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டு 1328 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். இதய நோய், மூச்சுத் திணறல், காய்ச்சல், விலங்குகளினால் காயம் அடைந்தோர் என மொத்தம் 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளை பிரவசத்திற்காக அழைத்து செல்லும் போது
31 பேருக்கு பாதி வலியிலேயே பிரவச வலி ஏற்பட்டு ஆம்புலன்சிலேயே பிரசவம் நடந்துள்ளது.

Tags : Nilgiri district , 33,000 people including pregnant women benefited from 108 ambulances in Nilgiri district last year.
× RELATED சோலூர் செல்லும் சாலையில் சாய்ந்துள்ள பைன் மரங்களால் விபத்து அபாயம்