சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோவையில் மலைப்பகுதிகளில் இரவில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
