×

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பழனி: பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார். பழனி கோயிலில் இருந்து இடும்பன் வரை ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் திருக்கோவில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் மூலம் 62 பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி 27-ந்தேதி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


Tags : Palani Murugan Temple ,Tamil ,Kudamuka ,Minister ,SekarBabu , Kudamuzku will be conducted in Tamil at Palani Murugan Temple : Minister Shekharbabu interview
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு