×

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் மோசடி: வனவர் பணியிடை நீக்கம்

கோவை: கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுப்பட்டதாக வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். வனவர் ராஜேஷ்குமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன் 2021-ல் இருந்து போலி ரசீது கொடுத்து மோசடி செய்துள்ளனர்.

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், நுழைவு கட்டணத்தில் போலி ரசீதை கொடுத்து, மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொங்கல் விடுமுறை நாட்களில், வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருந்தது.

பெரியவர்களுக்கு, ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்களுக்கு ரூ.50 வரை வனத்துறை கட்டணம் வசூலிக்கிறது. இந்நிலையில், டிக்கெட் வழங்கும் இடத்தில், பல்வேறு மோசடிகள் நடப்பது தெரியவந்துள்ளது. நுழைவு சீட்டு வழங்குமிடத்தில் இரண்டு மிஷின்களில், டிக்கெட் சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுகின்றனர். இதில், ஒரு மிஷினில் மட்டுமே முறையாக அரசாங்கத்திற்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்படுகிறது.

மற்றொரு மிஷின் மூலம், போலியான டிக்கெட் வழங்கி, அந்த பணத்தை அதிகாரிகளே வைத்துக் கொள்கின்றனர். இந்த மோசடி வேலை, எப்போதிருந்து நடக்கிறது என்று தெரியவில்லை. உரிய விசாரணை நடத்தினால்தான், எவ்வளவு லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது என்பது தெரியவரும் என்றார். இது உண்மையா என்பது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் பதில் தருகிறேன் என்று கூறியுள்ளார்



Tags : Coimbatore Falls , Fraud in entrance fee charged to visit Coimbatore Falls: Forester sacked
× RELATED மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்...