சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது. முப்படை, தேசிய மாணவர் படை, ஒன்றிய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நடைபெற்று வருகிறது. அணிவகுப்பு ஒத்திகை, குடியரசு தின விழா காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு . 22,24,26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 20 துறைகளை சேர்ந்த வாகனங்கள் இந்தாண்டு குடியரசு தின விழாவில் இடம் பெறுகின்றன. ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா விடப்படுவது வழக்கம். மெட்ரோ பணியால் இந்தாண்டு காந்தி சிலைக்கு பதில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது.பலகட்ட ஆலோசனைக்குப்பிறகு காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனவரி 22, 24, 25, 26-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த 4 நாட்கள் மற்றும் வரும் 26-ம் தேதி மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர். வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன. அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்த சாலையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
