×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று  ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது

இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அதிமுக விருப்பத்தை ஏற்றுகொள்வதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த முறை 2021 தேர்தலில் கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா போட்டியிட்டது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட பழனிசாமி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.

அதிமுக போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் அறிவித்த நிலையில் பாஜக இன்று ஆலோசனை நடத்துகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழ் மணிலா காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு அதிமுகவினர் முடிவை ஏற்கிறோம் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

மக்கள் நலன், கூட்டணிக் கட்சிகளின் நலனை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கு தமாகாவினர் உறுதுணையாக இருப்பார்கள். கடந்த 2021-ல் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த யுவராஜா போட்டியிட்டிருந்தார்.



Tags : Erode East Constituency ,Inter-Elections ,G. K.K. Vasan , AIADMK to contest Erode East by-election: GK Vasan interview
× RELATED காய்ச்சல் பாதிப்பால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி