×

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நேர்காணல் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்: டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நேர்காணலை தொடங்கி வைத்து டி.ஆர்.பாலு பேசினார். திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஈஸ்வரப்பன் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வகையில், அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பட்டியலை கேட்டு வாங்கி அதிலிருந்து நிர்வாகிகள் நியமனத்தை நடத்த தயாநிதி மாறன் திட்டமிட்டுள்ளார். விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்பதில் தயாநிதி மாறன் உறுதியாக உள்ளார்.

எனவே, இந்த பதவிகளுக்கான நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் நேற்றும், இன்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று மாநில செயலாளரும், நாடாளுமனற உறுப்பினருமான தயாநிதி மாறன் அறிவித்தார். அதன் அடிப்படையில், நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நேர்காணலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், டி.ஆர்.பாலு பேசுகையல், ‘‘ தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக நியமிக்கட்டுள்ளதால் சிறப்பாக செயல்படுவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்’’ என்றார். நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை யும் பின் மாலையும் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.  இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தென்காசி தெற்கு, தென்காசி வடக்குஉள்ளி்ட்ட பல  மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

Tags : DMK Sports Development Team ,DMK ,DR ,Balu , DMK Sports Development Team Interview DMK should strive to win all 40 constituencies: DR Balu speech
× RELATED “40 தொகுதிகளிலும் நாம்...