ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க இலங்கைக்கு கடனுதவி செய்ய இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கைப் போரின் போது அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, அதற்காக இன்று வரை வருந்தவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் கூட, தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கைவிடவில்லை. தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும் தொடர்கதையாகிவிட்டது.

இனவெறி கோட்பாட்டை ஒழிக்காதவரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகும். எனவே, இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, கடன் வழங்குவதற்கு ஆதரவளிப்பதோ கூடவே கூடாது. வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை குறைத்தல், போர்க்குற்றங்கள், தமிழர் இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதல் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும்.

Related Stories: