பயங்கரவாதம் இல்லாத சூழல் வேண்டும்: பாக். உறவு குறித்து இந்தியா கருத்து

புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தானுடன் எப்போதும் நட்புறவை விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாதம் இல்லாத சூழல் பாகிஸ்தானில் நிலவ வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான போருக்கு பின்னால் நாங்கள் பாடம் கற்று கொண்டோம், இப்போது இந்தியாவுடன் நாங்கள் அமைதியான உறவை விரும்புகிறோம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய வௌியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருப்பதாவது, “இந்தியா பாகிஸ்தானுடன் எப்போதும் நட்புறவையே விரும்புகிறது. ஆனால் அதற்கு பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலை பாகிஸ்தானில் ஏற்பட வேண்டும்” என்றார்.

Related Stories: