வாக்கு வங்கிக்கு பாஜ முன்னுரிமை தராது: பிரதமர் பேச்சு

யாதகிரி: பாஜ எப்போதும் வாக்குவங்கிக்கு முக்கியத்துவம் அளிக்காது. வளர்ச்சிப்பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். கர்நாடக மாநிலம் யாதகிரியில் நீர்ப்பாசனம், குடிநீர் திட்டம், கோடேகாலில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடிபேசுகையில், ‘21ம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தண்ணீர் பாதுகாப்பு மிக அவசியம். அடுத்த 25 ஆண்டுகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அம்ருத காலமாக அமைய இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் வளர்ச்சி இந்தியா கட்டமைக்கப்பட இருக்கிறது. பயிர்கள் செழிப்பாக வளர்வதாலும், அதே சமயம் தொழிற்சாலை விரிவாக்கம் அடைவதாலும் இந்தியா சிறந்த நிலைக்கு உயர முடியும். பாஜ எப்போதும் வளர்ச்சிப்பணிகளுக்கு தான் முன்னுரிமை அளிக்கும். வாக்கு வங்கிக்கு அல்ல. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் டபுள் இன்ஜின் அரசு இருந்தால் இரட்டிப்பு நன்மை, நலம் கிடைக்கும். இதற்கு கர்நாடக மாநிலம் பெற்ற பயன்களே உதாரணமாக நீங்கள் பார்க்கலாம்’ என்றார்.

Related Stories: