×

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் எல்இடி விளக்குகளுடன் சிக்னல்: மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னலில் எல்இடி விளக்குகள் எரியும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சிக்னலை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று தூக்கி வைத்தார். தொடர்ந்து, மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில், ரூ.16 லட்சம் செலவில் வாகனங்களின் எண்களை கண்டறிந்து பதிவு செய்யும் விதமான அதிநவீன சிசிடிவி கேமராக்கள், அதன் காட்சிகளை பதிவு செய்யும் சூப்பர் கணினி ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். போக்குவரத்து காவல் அதிகாரிகள் விதிமுறையை மீறும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக அபராதம் வசூலிக்கும் கருவிகளை வழங்கி நடைமுறைப்படுத்தினார்.

பின்னர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ”போக்குவரத்து வீதிமீறல்கள், அபராதங்களை பணமாக பெறாமல் ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில்  சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில், ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இயந்திரத்தை பயன்படுத்தி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் பெற வேண்டும். காவலர்கள் பணமாக வாங்க கூடாது. மாநகர பகுதிகளில் பழுதடைந்து செயல்படாமல் உள்ள சிசிடிவி கேமராக்களை சீர்செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.Tags : GST ,Tambaram ,Municipal Police Commissioner , Signal with LED lights on GST Road in Tambaram: City Police Commissioner inaugurates
× RELATED வரும் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்