×

என்னால முடியல... நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா

வெலிங்டன்: இனிமேலும் பதவியில் நீடிக்க முடியாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்து உள்ளார். நியூசிலாந்து நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் இருப்பவர் ஜெசிந்தா ஆர்டென். இவரது தலைமையிலான லிபரல் லேபர் கட்சி தொடர்ந்து 2 முறை வென்று ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அங்கு நடந்த தேர்தல்களில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றது. இந்த சூழலில் திடீரென பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்தார். பிப்.7ல் பதவியில் இருந்து விலகுவதாகவும், அக்டோபர் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னைப்பொறுத்தவரை நான் பதவி விலக இதுதான் சரியான நேரம். இனி நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவது இல்லை.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு வழிநடத்த போதுமான சக்தி என்னிடம் இல்லை. இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்து இருந்தால் வெறும் இரண்டே மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். வரும் ஏப்ரல் வரை எம்பி பதவியில்  இருப்பேன். என்னிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.  நான் என்ன செய்தாலும்  நியூசிலாந்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பேன். மேலும் எனது குடும்பத்துடன் கூடுதல் நேரத்தைச் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்காக அவர்கள் எல்லாவற்றிலும் அதிகம் தியாகம் செய்தவர்கள். இவ்வாறு தெரிவித்தார்.

* ஜெசிந்தாவை போன்றவர்கள் இந்தியாவுக்கும் தேவை: காங்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த  ஜெசிந்தா ஆர்டெர்னை பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில்,’இந்திய அரசியலுக்கு அவரைப் போன்றவர்கள் தேவை. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்  விஜய் மெர்ச்சன்ட் ஒருமுறை கூறும்போது,’ மக்கள் அவர் ஏன் போகவில்லை என்று கேட்பதற்கு பதிலாக ஏன் செல்கிறார் என்று  கேட்கும் போது செல்லுங்கள்’ என்றார்.  அதே போல் ஜெசிந்தா பதவி விலகி இருக்கிறார். அவரை போன்றவர்கள் இந்திய அரசியலுக்கு  தேவை’ என்றார்.

Tags : New Zealand ,Jacinda , I can't... New Zealand Prime Minister Jacinda resigns
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.