×

போரூர் மேம்பாலம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: ஆவடி மாநகர காவல் ஆணையரக அலுவலகம் தகவல்..!

சென்னை: சென்னை-ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணி நடைபெற்று வருவதால், போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போதுள்ள போக்குவரத்து முறையில் 20.01.2023 முதல் 23.01.2023 வரை சோதனை ஓட்டமாக கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படிப்படையில்;

* போரூர் மேம்பால சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலை மூடப்படவுள்ளது. எனவே, குன்றத்தூர் மார்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்ப இயலாது. இவ்வாகனங்கள் வலதுபுறம் திரும்பி கிண்டி மார்க்கமாக செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லிசாலை X இராமகிருஷ்ணாசாலை சந்திப்பில் “U Turn” எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.  

* குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பால சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் (MTC)- குன்றத்தூர் மெயின்ரோடு X பாய்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மாங்காடு சாலை வழியாக பூந்தமல்லி செல்லவும்.

* குன்றத்தூர் மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், போரூர் சந்திப்பிற்கு முன்பாக குன்றத்தூர் மெயின்ரோடு X மசூதி தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மசூதிதெரு வழியாக சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

* வடபழனி மார்க்கத்திலிருந்து ஆற்காடு சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை X  இலட்சுமி நகர் 40ft சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடைந்து போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

* ஆற்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போரூர் மேம்பலம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கிண்டி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை x இராமகிருஷ்னன் சாலை சந்திப்பில் U- Turn எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக செல்லலாம்

* வாகனங்கள் கிண்டி மார்க்கத்திலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக வந்து போரூர் மேம்பாலம் சர்விஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் போரூர் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

* பூந்தமல்லி மார்க்கத்திலிருந்து போரூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக வந்து U-Turn எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே இவ்வாகனங்கள் நேராக சர்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் பூந்தமல்லி சாலை X இராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் U Turn எடுத்து போரூர் மேம்பாலம் வழியாக மீண்டும் பூந்தமல்லி நோக்கி செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Borur Mahavalam ,Awadi City Officer's Office , Traffic change at Borur flyover junction: Avadi Municipal Police Commissioner's office informs..!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...