×

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்களில் பயணிக்க நாளை முதல் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பிற்பகல் 1.10க்கு புறப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் பிப்ரவரி 4, 11, 18, 25ம் தேதிகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.40க்கு புறப்படும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்களில் பயணிக்க நாளை முதல் முன்பதிவு தொடக்கம் என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.


Tags : Ernakulam ,Velankanni ,Southern Railway , Booking for Ernakulam - Velankanni - Ernakulam special trains starts from tomorrow: Southern Railway
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்