ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சபலென்கா வெற்றி

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றுபோட்டியில், 5ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா  6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் கேட்டி வோலிடென்ஸ், 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில், 9ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா வென்றார்.

எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட்டை 6-3,3-6,4-6 என போலந்தின் மக்தா லினெட் வீழ்த்தினார். ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ். கோகோ காப் உள்ளிட்டோரும்  3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

Related Stories: