வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வாவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியியிட்டுள்ள அறிக்கையில்; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வாவின் தாயார் அருணோதயம் அம்மையார் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்தினேன். தொலைபேசி வாயிலாக அபூர்வாவை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். தாயாரது பிரிவால் வாடும்  அபூர்வாக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: