×

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: முதல்வரின் தனி செயலாளர்களுக்கு கூடுதல் துறையில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சத்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு, உதயச்சத்திரனுக்கு சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறையில் கூடுதலாக வழங்கப்பட்டன. முதல்வரின் 4ஆம் தனிச்செயலாளர் வழங்கப்பட்டிருந்த 12 துறைகளை பிரித்து வழங்க உத்தரவு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக 4 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் ஆவர். இவர்கள் நான்கு பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகியவை ஆகும்.

இதையடுத்து உமாநாத் ஐஏஎஸ்க்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் சந்திப்புகள், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சமூக சீர்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை சண்முகம் ஐஏஎஸ் கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government ,Chief Minister ,Private Secretaries , Tamil Nadu Government orders allocating additional departments to Chief Minister's Private Secretaries
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...