×

ஈரோட்டில் கொரோனா தொற்று தடுக்க சூரியன் எப்.எம். விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு :  ஈரோட்டின் முதன்மையான பண்பலை ரேடியோ சூரியன் எப்.எம். 91.9  சார்பில், மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்று  தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு  பயனுள்ள விழிப்புணர்வு தகவல்களுடன், மருத்துவ நிபுணர்களின் நேர்காணல்,  பிரபலங்களின் விழிப்புணர்வு கருத்து என இவ்வாகனம் மூலம் பிரசாரம்  செய்யப்பட்டு வருகிறது. “SMS” என்ற வாசகத்துடன் வலம் வரும் இந்த வாகனம்,  சந்து, பொந்துகளில் நுழைந்து, மக்களிடம் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ‘சோப்பு’, ‘முகக்கசவம்’, ‘சமூக  இடைவெளி’ என்ற மூன்று ஆங்கில சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து “SMS”  என பெயரிடப்பட்டு, மக்கள் மனதில் நிலைக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு  பிரசாரம் நடந்து வருகிறது. இந்த வாகனத்தில், விளக்க படங்கள், மாவட்ட  கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், அரசு மருத்துவமனை டீன், கவிஞர் வைரமுத்து,  நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சூரி, எஸ்.ஜே.சூர்யா, நாசர், மனோபாலா, பாடகி  சைந்தவி போன்ற திரைத்துறை பிரபலங்கள் மற்றும் சூரியன் எப்.எம். நிகழ்ச்சி  தொகுப்பாளர்களின் விழிப்புணர்வு செய்திகள் பல இடம் பெற்றுள்ளது.சோப்பு,  முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றுடன் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியத்தை  உணர்த்தும் வகையிலும் இப்பிரசாரம் நடக்கிறது. கொரோனா தொற்றில்லா  மாவட்டத்தை உருவாக்குவோம், கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க…  சூரியன் எப்.எம். 91.9….

The post ஈரோட்டில் கொரோனா தொற்று தடுக்க சூரியன் எப்.எம். விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Sun F. ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!