×

சென்னை புத்தக காட்சியில் வரலாற்று நாவல்களுக்கு வரவேற்பு: பொன்னியின் செல்வன், வேள்பாரி நாவல்கள் அமோக விற்பனை..!!

சென்னை: சென்னை புத்தக காட்சியில் வரலாற்று நாவல்களை வாசகர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சூரியன் பதிப்பகத்தின் சிங்க பெண்ணே, ரத்த மகுடம் உள்ளிட்ட புத்தகங்கள் வாசகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் பணிக்கு திரும்பிவிட்டதால் புத்தக காட்சியின் 13வது நாளில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இதனால் வாசகர்கள் பொறுமையாக தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேடி பிடித்து வாங்கி சென்றனர்.

பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த பிறகு, கல்கி எழுதிய அந்த நாவலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. பால குமரனின் உடையார், ஆ. வெண்ணிலா எழுதிய கங்காபுரம், மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி, சு.வெங்கடேசன் வேள்பாரி, தமிழ் மகன் எழுதிய படைவேடு ஆகிய வரலாற்று நாவல்களும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குங்குமம் இதழில் 159 வாரங்கள் வெளியான ரத்த மகுடம் புத்தகத்தை கே.என்.சிவராமனின் வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பேராசிரியர் முகமது அப்துல் காதர் எழுதியுள்ள சிங்க பெண்ணே புத்தகமானது சாதிக்க தூண்டும் ஒவ்வொரு பெண்களையும் ஈர்க்கிறது. பல புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதால் மிகவும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டி இருப்பதாக வாசகர்கள் தெரிவித்தனர். புத்தக காட்சி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.


Tags : Chennai ,Book ,Fair ,Ponni ,Velbari , Chennai Book Fair, Historical Novel, Welcome
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...