பாஜ சொல்வது ஒன்று செய்வது ஒன்று மம்தா பானர்ஜி சாடல்

ஷில்லாங்: பாஜ கட்சியானது தேர்தலுக்கு முன் ஒன்று கூறுகிறது, ஆனால் அதன் பின்னர் வேறு ஒன்றை செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேகாலயா மாநிலத்தின் வடக்கு கரோ மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறுகையில்,‘‘ பாஜ இரட்டை முகம் கொண்டது. தேர்தலின்போது எதையோ கூறுகின்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வேறு எதையோ செய்கின்றது.

பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது பாஜ கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வழங்கி வருகின்றது. இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் கனவை நனவாக்கும் வகையில் சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாகும். மக்களுக்கான அரசு மக்களால் அமைக்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.   சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் தான்” என்றார்.

Related Stories: