ஐநா தலைவர் இந்தியா வருகை

ஐநா: ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோசி இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக ஐநா செய்தி தொடர்பாளர் பவுலினா குபியாக் கூறியுள்ளார். ஐநா தலைவர் சாபா கொரோசி இம்மாதம் 29ம் தேதி இந்தியா வர உள்ளதாகவும், மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் ஐநா செய்தி தொடர்பாளர் பௌலினா குபியாக் கூறினார். இந்த பயணத்தின்போது இந்திய விஞ்ஞானிகளை அவர் சந்திக்கிறார். நீர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களையும் சாபா கொரோசி பார்வையிடுகிறார்.

Related Stories: