ஏகே-203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே-203 ரக துப்பாக்கிகள் விரைவில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது. ரஷ்யா நாட்டின் தயாரிப்பான கலாஷ்னிகோவ் ஏகே-203 ரக துப்பாக்கிகள் மிகவும் புகழ் பெற்றவை. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வா என்ற இடத்தில் இந்தோ-ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகின் சிறந்த தாக்குதல் செயல்திறன் கொண்ட ஏகே-200 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 7.62 மில்லி மீட்டர் நீளமுள்ள ஏகே-203 ரக துப்பாக்கிகளின் முதல் தொகுப்பின் உற்பத்தி நிறைவடைந்துள்ளது. இவை விரைவில் இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏகே-203 ரக துப்பாக்கிகள் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் திறன் உள்ளிட்ட சிறந்த அம்சங்கள் உடையவை.

Related Stories: