பொழுது போக்கிற்கு விளையாட்டு என கருதியதால் நாட்டுக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி வேதனை

பஸ்தி: விளையாட்டை பாடத்திட்டம் சாராத செயல் என்று இருந்ததால் திறமைவாய்ந்த வீரர்கள் இருந்தும் இந்தியாவால் எதையும் சாதிக்க முடியவில்லை என பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2-ம் கட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார். உபி மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் நடந்து வரும் இவ்விழாவில் மோடி பேசுகையில்,‘‘விளையாட்டு விழாவால் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு, பாடத்திற்கு அப்பாற்பட்ட கூடுதல் தகுதியாக வைக்கப்பட்டது. இது பொழுதுபோக்காக கருதப்பட்டதால் திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் நாடு இந்த குறைபாட்டைப் போக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன’’ என்றார்.

* யோகா செய்ய அறிவுரை

மோடி பேசும்போது,‘‘ ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உடற்தகுதியின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர். இதற்காகவே உடற்தகுதி இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. யோகாவை தினசரி வாழ்வில் மேற்கொள்ளவேண்டும். யோகாவால் உடல் ஆரோக்கியம் பெறும். விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதில்,சிறுதானியங்கள் மிகப் பெரிய பங்காற்றும்’’  என்றார்.

Related Stories: