ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

Related Stories: