×

பாரதியார் பல்கலை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: வனத்துறை அதிகாரிகள் விளக்கம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோவை மருதமலை அடுத்த பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் வைரலானது. பலர் சிறுத்தை நடமாட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பது உண்மை எனவும், பலர் இது போன்ற கட்டிடம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இல்லை எனவும் தெரிவித்து வந்தனர். மேலும், வனத்துறை அதிகாரிகளுக்கும் வீடியோவை பார்த்து அது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது, வீடியோவில் இருப்பது சிறுத்தை இல்லை எனவும், ஜாகுவார் இனம் எனவும் தெரியவந்தது. இந்த ஜாகுவார் இனம் தமிழகத்தில் இல்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் கூறுகையில், ‘‘வீடியோவில் உள்ளது சிறுத்தை இல்லை. ஜாகுவார் இனம். இது தமிழகத்தில் இல்லை. இந்த படம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டதல்ல. இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறுவது மிகவும் தவறான தகவல்கள். இது போன்ற தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்ப வேண்டாம். தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Bharathiar University Campus , Bharathiar University, No leopard movement, forest department officials explain
× RELATED தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 2 லட்சம்...