×

ஜாதி, வர்ணதர்மம், தீண்டாமையை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட தகுதி இல்லை: கி.வீரமணி கண்டனம்

சென்னை: வைக்கம் போராட்டத்தில் பங்கேற்காமல் அதற்கு உரிமை கோர முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வரை ஜாதி, தீண்டாமையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். அரசியல் லாபத்துக்காக நாடகமாடுவதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1924ல் வைக்கத்தில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்துக்கு தந்தை பெரியார் தலைமை தாங்கி, கைதாகி சிறை சென்றார். கேரள போராளிகளான டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப், கே.பி.கேசவமேனன் அழைப்பை ஏற்று போராட்டம் நடத்தினார். ஒதுக்கப்பட்ட ஜாதியினர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமையை பெரியார் பெற்று தந்தார்.

வைக்கம் போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆர்.எஸ்.எஸ்., அதற்கு உரிமை கோருவது அசல் ஏமாற்று வேலை. ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு கால்கோளிட்ட மகத்தான மக்கள் போராட்டமே வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தீண்டாமையை எதிர்த்து போராடுபவர்கள் கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும். ஜாதி, வர்ணதர்மம், தீண்டாமையை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட தகுதி இல்லை.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று பேசுகிறார்களே, நாடு முழுவதும் ஒரே ஜாதிதான் என்று கூறுவார்களா? என கேள்வி எழுப்பிய கி.வீரமணி, நாடு முழுவதற்கும் ஒரே ரேஷன் கார்டு என்பவர்கள், அனைவர்க்கும் ஒரே சுடுகாடு என சட்டம் இயற்றுவார்களா? எனவும் கடுமையாக சாடியுள்ளார்.


Tags : Castery ,Chritarism ,R.R. ,S.S. S.S. ,Vaikam Fight Century Festival ,BC Veeramani , Caste, Varnadharma, Untouchability, RSS, Vaikam, K. Veeramani
× RELATED திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட...