உலக கோப்பை ஹாக்கி கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா: வேல்ஸ் அணியுடன் நாளை மோதல்

புவனேஸ்வர்: 15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின்  ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில்  மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் டி  பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் 2-0 என  ஸ்பெயினை  வீழ்த்தியது. 2வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல்கள் இன்றி  டிரா செய்தது. இந்நிலையில்,கடைசி லீக் போட்டியில் நாளை இரவு 7 மணிக்கு புவனேஸ்வரில் வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த பிரிவில் தற்போது இங்கிலாந்து, இந்தியா தலா  ஒரு வெற்றி,ஒரு டிரா என 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

ஆனால் இங்கிலாந்து 2 போட்டிகளில் 5 கோல் அடித்துள்ளதால் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் நாளை போட்டியில் கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு இதே பிரிவில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிகட்டாயம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: