×

34 பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கிய ஆபாச நடிகருக்கு மனதளவில் தகுதியில்லை! நரம்பு தளர்ச்சி உள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: 34 பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கிய ஆபாச நடிகருக்கு மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால், அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆபாச திரைப்படங்களின் கனவு நாயகனாக 1970ம் ஆண்டுகளில் வலம் வந்த ரொனால்ட் ஜெர்மி ஹயாட் என்று அழைக்கப்படும் ரான் ஜெர்மி (69), இதுவரை 2,000க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்து சாதனை படைத்தார். இவரது ஆபாச படங்கள் உலகளவில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அவர்களில் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் ரான் ஜெர்மி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு லாஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரான் ஜெர்மி ஆஜராகவில்லை. மாறாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து நீதிபதி ரொனால்ட் எஸ்.ஹாரிஸ் அளித்த உத்தரவில், ‘குற்றம்சாட்டப்பட்ட ரான் ஜெர்மிக்கு, குணப்படுத்த முடியாத நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது அறிவாற்றலும் குறைந்துள்ளது. அவரது உடல்நிலையை அவ்வப்போது மறுமதிப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது, அவர் மனதளவில் விசாரணைக்கு தகுதியற்றவர் என்பது தெரிகிறது. எனவே இவ்வழக்கின் விசாரணை பிப்ரவரி 7ம் தேதி ரான் ஜெர்மி அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் நடைபெறும்’ என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து ரான் ஜெர்மி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 20 ஆண்டு கால இடைவெளியில் 21 பெண்களை ரான் ஜெர்மி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது 34 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணையின் போது தான் குற்றமற்றவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு, விசாரணைக்கு தகுதியற்றவர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே அவருக்கு மனநல சிகிச்சை அளித்த பின்னர் தான் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகள் நடக்கும்’ என்று கூறினார்.

Tags : 34 Rape case, porn actor, mentally unfit, court declares nervous breakdown
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்