×

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் வயதான கன்னியாஸ்திரி மரணம்: பிரான்ஸ் மேயர் அறிவிப்பு

டூலோன்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான கன்னியாஸ்திரி  ஆண்ட்ரே காலமானதாக அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான டூலோனில் வசித்து வந்த உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி சகோதரி லூசிலே ராண்டன் என்ற ஆண்ட்ரே (118) காலமானார்.

இதுகுறித்து நகர மேயர் ஹூபர்ட் ஃபால்கோ வெளியிட்ட இரங்கல் செய்தியில்:
உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி ஆண்ட்ரே நேற்றிரவு காலமானார் என்பதை மிகுந்த சோகத்துடன் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 1904ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, லூசில் ராண்டன் என்ற பெயரில் பிறந்த ஆண்ட்ரே, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உலகின் அதிக வயதான பெண் என்று கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றார்.

இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மத சேவைக்காக அர்ப்பணித்தார். கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஆவதற்கு முன், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை கவனித்துக்கொண்டார். கடந்தாண்டு அவர் 118 வயதை எட்டியபோது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கையால் எழுதப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : France Mayor , Guinness Book, World's Oldest Nun, Death, France Mayor Announces
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்