×

'தமிழகம்'என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?: தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: தமிழகம் என்று கூறிய ஆளுநர், தற்போது புது விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் விளக்கம்:

தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டது ஏன்? என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் என குறிப்பிடுவதே பொருத்தமானது என ஆளுநர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என மாற்ற பரிந்துரைக்கவில்லை. காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயான தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.

வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதே பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் பேசியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமது பேச்சை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள் கொள்வது தவறானது எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கி.வீரமணி கேள்வி:

தமிழகம் என்று கூறிய ஆளுநர், தற்போது புது விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் என்று ஏன் கூறினேன் என்று விளக்க வேண்டிய நிர்பந்தம் ஆளுநருக்கு ஏற்பட்டது ஏன்?. காசிக்கும், ஆளுநரின் இந்த வெளிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? எனவும் கி. வீரமணி வினவியுள்ளார்.

விளக்க அறிக்கையிலும் கூட அந்த காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை என மீண்டும் புது சர்ச்சை எழுப்புகிறார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை சமாதானம் ஆகாது; பிடிவாதத்தைத்தான் காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்; புரிந்து கொள்ள வேண்டியது ஆளுநர்தான் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,G.K. ,President ,K.M. Veeramani , 'Tamilikam', Governor, New Explanation, K. Veeramani Question
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...