அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

நாமக்கல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. சோதனையில் கணக்கில் வராத பணம், சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். லஞ்ச ஒழிப்பு சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கே.பி.பி.பாஸ்கரின் சொத்து மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக  இருந்து வந்தவர் கே.பி.பி.பாஸ்கரன் இவர் தற்போது நாமக்கல் நகர அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். பாஸ்கர்க்கு சொந்தமான வீடு, மோஹன ரோட்டில் உள்ளது. பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகின்றர்.

அவரது பெயரிலும் மற்றும் அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனம் பெயரிலும் தனது பணிகாலத்திலும் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருமானம் சட்டப்படியான வருமணத்தைவிட 315% அதிகம் எனவும் இதை ஒட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 12.08.2022 அன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அவருக்கு சொந்தமான உறவினர்கள் மற்றும் ஆதரவாளர் வீடுகளிலும், மற்றும் மதுரை, திருப்பூர், உள்ளிட்ட அலுவலர் இல்லங்களிலும் போன்ற 26 இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் லட்சக்கணக்கான பணம் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் இன்று பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொத்துமதிப்பிடு ஆய்வு செய்ய வந்துள்ளனர். தற்போது அவரது வீட்டில் அந்த குழுவினர் சொத்துமதிப்பிடும், மற்றும் ஆவணங்களும் சரிபார்த்து வருகின்றார்கள்.

20க்கு மேற்பட்ட அதிகாரிகளும், சோதனையாளர்களும் இந்த சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள், இந்த சோதனையானது கடந்த 1 மணி நேரமாக நடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரம் மேலாக இந்த சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொத்துக்கள் எந்த முறையில் வாங்கப்பட்டது, அல்லது முறைகேடாக வாங்கப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது பாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டுபேரிடமும் அடுக்குமுறையாக கேளிவிகள் எழுப்பி விசாரணை செய்து வருகிறார்கள்.     

Related Stories: