சென்னை: காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார். வரலாற்று சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் பேசியதாகவும், தனது பேச்சை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள் கொள்வது தவறானது என ஆளுநர் தெரிவித்தார்.