சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகள் அகற்ற : வியாபாரிகள் கோரிக்கை

சென்னை தண்டையார்பேட்டை அருகே மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது, இங்கு இருக்கக்கூடிய இந்த பகுதி மக்களுக்காக மீன் விற்பனை மற்றும் காய்கறி விற்பனை செய்யக்கூடிய இடமாக இந்த தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் மார்க்கெட் இருந்து வருகிறது. ஆனால் இங்கு முழுவதுமாக பராமரிப்பு எதுவும் இல்லாமல் இந்த மார்க்கெட் மேம்படுத்தாமல் நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. .

இதனால் இங்கு இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுருக்கிறது. ஒருசிலர் இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாமல் சாலையில் விற்பனை செய்து வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாகவே கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகவே இது போன்ற பிரச்சனை இங்கு இருக்க கூடிய வியாபாரிகளும், மற்றும் பொதுமக்களும் சந்தித்து வருகிறார்கள். இந்த மார்க்கெட்டை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகளாகவே இங்கு இருக்ககூடிய வியாபாரிகள் மத்தியில் இருந்து வருகிறது.

அதை போன்ற சுகாதாரமற்ற நிலையில் இருக்க கூடிய இந்த மார்க்கெட் இருந்து வருகிறது. அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் இருந்து வெளியேற கூடிய கழிவு நீரும் இந்த மார்க்கெட்டை ஒட்டி, வியாபாரிகள் வியாபாரம் செய்ய கூடிய இடத்தில் வருகிறது. இது போன்ற சிக்கல்களும், பிரச்சைகளும் வியாபாரிகள் சந்தித்து வருகின்றனர்.

எனவே இந்த மார்க்கெட் மேம்படுத்த வேண்டும் புதியதாக கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு இருக்கக்கூடிய பகுதிமக்கள் முன்வைக்கிறார்கள். இது ஏற்கனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இங்கு இருக்கக்கூடிய குப்பைகளை அகற்ற வேண்டும் குறிப்பாக வெளியேற கூடிய கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிருப்பதாகவும் இங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கக்கூடிய சிரமத்துடன் தான் வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.   

Related Stories: