×

பொங்கல் கொண்டாட்டத்திற்கு பின் சென்னை திரும்பிய மக்கள்: பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்களுக்கு அனுமதி..!!

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு பிறகு மக்கள் சென்னை திரும்பினர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். 4 நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சுங்க சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து ஒரே நேரத்தில் அதிக அளவு மக்கள் குவிந்து வருவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக செங்கல்பட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாலை முதல் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டிருந்ததால் நெரிசல் இன்றி மக்கள் பெருங்களத்தூரை கடந்து சென்னை சென்றனர்.


Tags : Chennai ,Pongal ,Bharanur Sunkhashav , Pongal, Chennai, Paranur Tollbooth, Vehicle
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா