×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மக்கள் கோரிக்கை: ரிசர்வ் வங்கி மறுப்பு

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஒன்றிய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய திட்டத்தை கொண்டுவந்தது, இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நெடுநாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், இமாசல அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வாய்ப்பு இல்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திவிட்ட நிலையில் மாநில அரசுகளை எச்சரிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் சேமிப்புகள் குறுகிய கால அடிப்படையிலானவை என ரிசெர் வங்கி அதில் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதிய செலவுகளை எதிர்காலத்திற்கு தள்ளிபோடுவதால் வரும் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் சுமை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டால் அது மாநிலங்களில் நிதி நிலைமைகளில் பேராபத்தை உருவாக்கும் என்றும் கடன் சுமைகளை பெரும் அளவு அதிகரிக்க செய்யும் என்றும் RBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : RBI , People's demand to implement old pension scheme: RBI refuses
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்