×

வாக்காளர் பட்டியலில் இருந்து எவ்வாறு பெயர்கள் நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.!

டெல்லி; வாக்காளர் பட்டியலில் இருந்து எவ்வாறு பெயர்கள் நீக்கம் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கலான பதில்மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு முன் வாக்காளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்படுகிறது. அதன்பிறகுதான் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நோட்டீஸ் இல்லாமல், கருத்தைக் கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது.

Tags : Election Commission ,Supreme Court , The Election Commission explained in the Supreme Court how to remove names from the voter list.
× RELATED விளம்பரத்தில் குறிப்பிட்ட பகுதிகளை...