தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டார்

டெல்லி: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டார். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது.

பின்னர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதே போன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: