×

பிரிவினை பார்க்க வேண்டாம் வம்சி பைடிபள்ளி உருக்கம்

சென்னை: விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிக்க, வம்சி பைடிபள்ளி இயக்கிய ‘வாரிசு’ படம் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்தது. இதையடுத்து நடந்த பட நிகழ்ச்சியில் வம்சி பைடிபள்ளி உருக்கமாகப் பேசியதாவது: ‘வாரிசு’ ஒரு படம் அல்ல. விஜய், தில் ராஜு ஆகியோர் என்மீது வைத்த நம்பிக்கை. இப்படம் தொடங்கிய நாளிலிருந்து, ‘இது தெலுங்கு இயக்குனர் படம்’ என்றே சொல்லி வந்தனர். இது என் மனதை மிகவும் பாதித்தது. ‘வாரிசு’ பக்கா தமிழ்ப் படம்.

நான் தமிழ் இயக்குனரா? தெலுங்கு இயக்குனரா என்பதை தாண்டி, முதலில் ஒரு மனிதன் என்று மதியுங்கள். இதுபோன்ற பிரிவினைகளை ஒதுக்கிவிட்டு, ‘வாரிசு’ படத்துக்காக விஜய் ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் எனக்கு ஒரு இடம் கொடுத்துள்ளனர். இப்படத்தில் சரத்குமாரின் கேரக்டர் மற்றும் நடிப்பைப் பார்த்த என் தந்தை, உடனே என்னைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vamsi Baitipalli Urukkam , Don't look at the division Vamsi Baitipalli Urukkam
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து...