பாட்டி வேடத்தில் யோகி பாபு

சென்னை: காமெடி, குணச்சித்திரம், கதையின் நாயகன் என்று பல படங்களில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. லதா ஆர்.மணியரசு இயக்கும் படத்தில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பாடகர் கார்த்திக் இசை அமைக்கிறார். இப்படத்துக்கு ‘மிஸ் மேகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் யோகி பாபு நடித்துள்ளார்.

Related Stories: