×

உலகத்தின் உச்சியில் ராஜமவுலி ஜேம்ஸ் கேமரூன் புகழாரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமவுலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் - ராஜமவுலி சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்தனர். இதையடுத்து டிவிட்டரில், ‘இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார்.

படம் குறித்து நீங்கள் பத்து நிமிடம் எங்களுடன் பகுப்பாய்வு செய்தது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்” என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார். இதற்கு முன் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை ராஜமவுலி சந்தித்து பேசினார். இந்நிலையில் அவதார் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பாராட்டு இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Rajamouli ,James Cameron , Rajamouli on top of the world James Cameron praise
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்