×

லஷ்கர் இ தொய்பா துணைத்தலைவர் சர்வதேச தீவிரவாதியாக அப்துல் மக்கி அறிவிப்பு: ஐநாவில் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி

ஐக்கிய நாடுகள் சபை: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணைத்தலைவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரகுமான் மக்கி. கடந்த 2011 நவம்பர் 26ல் மும்பையில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் இவர். தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுவது, இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பது போன்றவை மக்கியின் முக்கிய பணி. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதத்தை தூண்டி விடுவதில் மக்கி முக்கிய பங்காற்றி உள்ளார்.

மேலும் அமெரிக்காவில் பல்வேறு நாச வேலைகளிலும் மக்கி ஈடுபட்டுள்ளார். இதனால், இவரை இந்தியாவும், அமெரிக்காவும் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தன. அதோடு, கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு குழுவும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டும் புகாரில் குற்றவாளியாக மக்கியை அறிவித்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், மக்கியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென இந்தியாவும், அமெரிக்காவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் நேற்று முன்தினம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து இந்தியாவின் முன்னாள் நிரந்தர ஐநா தூதரான திருமூர்த்தி, ‘‘ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் சார்பில் முன்மொழியப்பட்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கி சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’’ என்றார்.



Tags : Lashkar ,-Taiba ,Vice ,Abdul Maki ,India ,UN , Lashkar-e-Taiba Vice-Chairman Abdul Maki Declared International Terrorist: Success for India's Effort at UN
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்