தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பங்கஜ் நியமனம்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) முன்னாள் இயக்குநர் பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 1988ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த சிங், 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2021ம் ஆண்டில் பிஎஸ்எப்.

இயக்குநராக பதவியேற்ற இவர், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பணிஓய்வு பெற்றார். தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை பிரகாஷ் சிங் 1993 ஜூன் முதல் 1994 ஜனவரி வரை பிஎஸ்எப் இயக்குநராக பதவி வகித்துள்ளார். 

Related Stories: