×

61 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் முதல் முறை மக்கள் தொகை வீழ்ச்சி: விரைவில் இந்தியா முந்த வாய்ப்பு

பீஜிங்: சீனாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள்தொகை பெருக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை, 2023ம் ஆண்டில் இந்தியா முந்தும் என ஐநா தனது உலக மக்கள்தொகை புள்ளிவிவர கணிப்பில் அறிவித்தது. இதற்கு ஏற்றார் போல் சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக அந்நாடு கடந்தாண்டு அறிவித்தது. இந்நிலையில், 61 ஆண்டுக்குப் பின் முதல் முறையாக சீனா தனது மக்கள் தொகை வீழ்ச்சியை தற்போது பதிவு செய்துள்ளது.

சீன அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த 2021ம் ஆண்டை விட நாட்டின் மக்கள் தொகை 8 லட்சத்து 50 ஆயிரம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 1961ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் வீழ்ச்சி இது. நாட்டின் மொத்த மக்கள் தொகை 141.18 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் 1.062 கோடி குழந்தைகள் பிறப்பு பதிவான நிலையில், 2022ல் 95.6 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுவே இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.041 கோடியாக இருந்துள்ளது.
 
ஆண்களின் எண்ணிக்கை 72.20 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 68.9 கோடியாகவும் உள்ளது. 16 மற்றும் 59 வயதுக்கு உட்பட்ட மக்கள் தொகை எண்ணிக்கை 87.5 கோடியாக உள்ளது. எனவே, ஐநா கணிப்புபடி, மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை விரைவில் இந்தியா முந்துவது உறுதியாகி உள்ளது.

Tags : China ,India , China's population declines for the first time in 61 years: India's chance soon
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...