கொரோனாவிற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் மொபைல் போன் மோகத்தில் மாணவர்கள்: வீட்டு பாடம் புரியவில்லை; எங்களை நம்பவில்லையா என மகன், மகள் கேள்வி

* வேதனையில் துடிக்கும் பெற்றோர்

* மழையாக கொட்டும் ஆபாச படங்கள்

சென்னை:  கொரோனா தணிந்துள்ள பிறகு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் வாங்கி ெகாடுத்த செல்போனை மீண்டும் பெற்றோரிடம் தர மாணவ-மாணவிகள் மறுப்பு தெரிவிப்பதுடன், பெற்ற பிள்ளைகள் மீதே நம்பிக்கை இல்லையா என்று கேள்வி கேட்பதால், அவர்கள் மனம் வெதும்பி காணப்படுகின்றனர். எனினும் தனியாக உட்கார்ந்து கொண்டு பள்ளி நேரத்துக்கு பிறகு செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர் என்று பெரும்பாலான பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தற்போது தான் பொதுமக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதரங்களின் பாதிப்பு கடுமையாக இருந்தது. வியாபாரம், சாப்பாடு பிரச்னை, உடல் நலப்பிரச்னை, மருத்துவ பிரச்னை, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், வருவாய் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதில், மாணவர்களின் செல்போன் பிரச்னையை தவிர மற்றவற்றில் இருந்து பெற்றோர் மீண்டும் வந்துவிட்டனர். ஆனால், மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக போய்விட்டது என்று பெற்றோர் புலம்புகின்றனர்.

கல்வி பாதிப்பு: கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் என அவர்களின் நேரடி கல்வி என்ற கலாச்சாரம் மாறியது. ‘குட் மார்னிங் சார்’ என்று நேரடி வகுப்பில் ஆசிரியர்-மாணவர்களின் ஆரோக்கிய நிலைமை மாறிபோனது. படுக்கையில் படுத்தபடியே செல்ேபானில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் நிலைமை காண முடிந்தது. பல மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை போல ஆன்லைன் வகுப்புகள் இல்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் நிலைமை. காரணம், செல்போன், டேட்டா போன்றவற்றின் செலவை பெற்றோரால் தாங்க முடியவில்லை. மலை கிராமங்களில் மரத்தின் மீது சிக்னல் கிடைக்கும் இடத்தில் சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெற்றோர் கவலை: புத்தகத்துக்கு பதிலாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. கல்லூரி மாணவர்களை விட பள்ளி மாணவர்கள் இதனால் பாதிப்படைந்தனர்.  ஸ்மார்ட் போன் இல்லாமல் பரிதவித்த பலர், தற்கொலை செய்து கொண்டனர். இது பலர் என ஆன்லைன் வகுப்புகளால் பல பிரச்னைகள் ஏற்பட்டது. செல்போனில் டேட்டாவை ஆன் செய்தபோதே ஆபாச படங்கள் வரிசை கட்டி வந்தன. அவற்றை முதன் முதலாக செல்போனை பயன்படுத்தும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கட்டுப்படுத்த தெரியவில்லை. சில வாரங்களில் இந்த காட்சிகளும் மாணவர்களிடம் பழகிவிட்டது. செல்போன்களை படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் தரக்கூடாது என்று உறுதியுடன் இருந்த பெற்றோர்களும், புது செல்போன் வாங்கி தங்கள் மகன் நன்றாக படிக்க வேண்டும் என வாங்கி தந்தனர்.

எனினும் அவர்களுக்குள் ஆபாச படங்களின் கவலை மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், இலவச படிங்கள, ஒடிடி ேபான்றவற்றில் ருசி கண்ட மாணவ-மாணவிகள், நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்தனர். எங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று மாணவிகள் வேறு அர்த்தத்தில் கேட்க... பெற்றோர் மவுனமாகவே இருக்க வேண்டிய சூழல் நிலவியது. மாணவர்ளும் அதே கேள்வி, ஆனால், அர்த்தம் வேறு விதமாக இருந்தது. இதனால் பெற்றோர் குழந்தைகளின் நம்பிகையை இழக்க விரும்பாமல் செல்போனை அவர்களிடமே கொடுத்துவிட்டனர்.

செல்பி மோகம்: மாணவர்களுடன் மாணவிகள் செல்பி எடுத்தபோதும், அதை போனில் சேமித்து வைத்திருந்தபோது தான் பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் ‘ராங்’ ரூட்டில் ெசல்வதை கண்டறிந்தனர். மேலும், பள்ளி விட்டு வந்தவுடன் அம்மா என்று அழைத்தபடி வந்த பிள்ளைகள், இப்போது ரூமில் முடங்கி சுவற்றுக்கே கேட்காத வகையில் ரகசியமாக பேசும் வழக்கத்தை ஏற்படுத்தினர். இந்த ரகசிய பேச்சும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படிப்பை நிறுத்தி மாணவிகளை வீட்டிலேயே இருக்கும்படி சில வீடுகளில் முடங்க செய்துவிட்டனர். பல மாணவிகளை பெற்றோரா வாகனத்தில் கொண்டு சென்று பள்ளி, கல்லூரியில் விடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்படி இருந்தும் செல்போனை அவர்களிடம் வாங்க பெற்றோரால் முடியவில்லை.

படிப்பவர்களுக்கு செல்போன் வரப்பிரசாதம்:  படிக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் வரபிரசாதகமாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அவர்கள் தங்கள் பாடத்தில் எழுந்த சந்தேகங்களை யூடியூப் போன்ற தளங்களில் இருந்து பார்த்து சந்தேங்களை தீர்த்து கொண்டனர். மேலும், புத்தகத்தில், ஆசிரியர் இடத்தில் எளிதில் அணுகி கேட்க முடியாத சந்தேகங்களுக்கு இந்த தளங்கள் எளிதாக, எளிமையாக மாணவர்களுக்கு புரிய வைத்தன. பல மாணவர்கள் யூடியூப் மற்றும் பல்வேறு கேள்விகள்-விடைகளை செல்போன் மூலம் தெரிந்து கொண்டு 30% வரை மதிப்பெண் கூடுதலாக பெறுவதற்கும் இந்த செல்போன் காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

இது நேரடி வகுப்புக்கு பிறகும் செல்போன் தர மறுக்கும் மாணவர்களை குறித்து கல்வியாளர் ராஜன் கூறுகையில், ‘‘ நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடந்தாலும், மாணவர்களை இன்னும் சில பள்ளிகள் செல்போனுக்கு அடிமையாகவே ஆக்கி வைத்துள்ளன. தங்கள் சேம்பேறித்தனம் மற்றும் நேரடியாக நடத்தும் திறனை குறைத்துவிட்டன. இதனால், பாடங்களில் சிலபஸ் மெட்டிரியல்களை போனில் அனுப்பும் வழக்கம் சில பள்ளிகள் மத்தியில் வந்து விட்டது. இதனால் மாணவர்களிடம் இன்னும் செல்போன் இருக்கிறது. இதனால், எழுதும் வழக்கம் குறைந்து விட்டது. ஏற்கனவே சரளமாக ஆங்கில பேசும் வழக்கம் பெரும்பாலான பள்ளிகளில் குறைந்துவிட்டது. அதற்கு செல்போனிலேயே வகுப்பு நடக்கிறது. மாணவர்களிடம் தங்களை அழைத்து விளக்கம் கேட்டபார் ஆசிரியர் என்ற பயம் சுத்தமாக போய்விட்டது.

கல்லூரியைவிட பள்ளிகளில் எழுதும் வழக்கம் முக்கியமானது. அது செல்போனால் தடுக்கப்பட்டுள்ளது. விடைகளை புத்தகத்தில் தேட நேரமாகிறது என்பதால் மாணவிகள் செல்போனில் தேடி விடைகளை எழுதிவிடுகின்றனர். இதில் பாட புரிதல் இல்லை. இதனால் அவர்களின் எழுத்து திறன், மனப்பாட திறன் போன்றவை குறந்து போகும். ஆரம்ப காலகட்டத்தில் மன கணக்கு போட்டு பதில் சொல்லும் மாணவர்கள் அதிக அளவில் இருந்தனர். தற்போது டெக்னாலஜி வந்ததால் அவர்களின் இந்த திறன் மறைந்து விட்டது. சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்தும் மோகம் அவர்கள் மத்தியில் அதிகமாக வளர்ந்துவிட்டது. இன்னும் சொல்ல போனால் பிற மாணவர்கள் முன்னால் செல்போன் வைத்திருப்பதை கவுரவமாக எண்ண ஆரம்பித்து விட்டனர். இது மிகவும் வேதனைக்குறிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

* கலைத்திருவிழா

மாணவர்களின் செயற் திறன் கொரானா காலகட்டத்தில் குறைந்து விட்ட காரணத்தினால் அவர்களின் தனி திறன்களை மீட்டெடுக்க தமிழக அரசு கலை திருவிழாவை நடத்தியது. இதனால் கடந்த மாதம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடன் தங்களின் தனி திறனை வெளிபடுத்தி வந்தனர். பாட்டு, நடனம், எழுத்து, இசை, சிலம்பம், பறை என அவர்களின் திறமைகளை தமிழ்நாடே வியர்ந்து பார்த்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். இந்த கலை திருவிழா மாணவர்கள் தங்களின் இலட்சியங்களை எட்டுவதற்கு முதல் படி கட்டாக அமைந்தது. இதுபோன்ற காரணங்களால் அவர்கள் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாகாமல் தங்களின் எதிர்கால பாதையை சிறப்பாக தேர்வு செய்தனர். அரசு எவ்வளவு முயற்சித்தாலும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் அவர்களை முறையாக கையாண்டால் மட்டுமே மாணவர்கள் வெற்றியின் பாதையை நோக்கி செல்ல முடியும்.

செல்போனால் உயிரிழந்த பள்ளி மாணவர்கள்

* 2020ம் ஆண்டில் ஜூலை 29ம் தேதி ஆன்லைன் வகுப்பிற்கு போன் வாங்கி தரவில்லை என பண்ருட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

* திருப்பத்தூரில் ஆகஸ்ட் 5ம் தேதி பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் கொடுக்கவில்லை என்று 10ம் வகுப்பு மாணவர் திருமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* 2021ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செல்போனில் கேம் விளையாடுவதற்கு அண்ணனுடன் ஏற்பட்ட சண்டையால் 13 வயது மாணவன் பாலகுரு தூக்கிட்டு தற்கொலை. காஞ்சிபுரத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு பிறகு தொடர்ந்து திகில் படம் பார்த்து வந்த 10ம் வகுப்பு மாணவி ரக்‌ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: