×

 ‘படையப்பா’ யானைக்கு ரசிகர் மன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் உள்ள மாட்டுப்பெட்டி, குண்டலா உள்பட சில பகுதிகளில் ஒரு காட்டு யானை புகுந்து ஊர் மக்களை அடிக்கடி அச்சுறுத்தி வந்தபோதிலும் நாளடைவில் அந்த யானை மீது அப்பகுதி மக்களுக்கு பாசம் ஏற்பட்டது. அந்த யானைக்கு ‘படையப்பா’ என்று பெயரையும் சூட்டினர். இப்போது ஒரு படி மேலே போய் ‘படையப்பா’ யானைக்கு ரசிகர் மன்றமும் வந்துவிட்டது. ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த குரூப்பில் படையப்பா யானை எங்கெங்கு செல்கிறது என்பது குறித்து விவரங்களையும், அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே நேற்றும் இந்த ‘படையப்பா’ யானை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்துவிட்டு திரும்பிச் சென்றது.

Tags : Fan club for 'Padayappa' elephant
× RELATED ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தில் நடித்த...