×

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு: சீனாவின் முட்டுக்கட்டைக்கு மத்தியில் ஐநா அதிரடி

நியூயார்க்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளதால், இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கி (மும்பை, ெடல்லி செங்கோட்டை மீதான தாக்குதலில் தொடர்புடையவன்), சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறான்.

அவன் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎல்-வின் தொடர்பில் உள்ளவன் என்பது உறுதியாகி உள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம், ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் - 7ம் அத்தியாயத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறிவந்தது.

ஆனால் இந்தியாவின் முயற்சிக்கு கடந்தாண்டு ஜூனில் சீனா முட்டுக்கட்டை போட்டது. ஆனால் தற்போது அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளதால், இந்த நிகழ்வு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lashkar-e-Tooiba Organization ,UN Action ,China , Lashkar-e-Taiba chief declared international terrorist, UN action
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...