×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி சபலென்காஅபார ஆட்டம்

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலே நீமியரை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஸ்வியாடெக் அடுத்து கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை சந்திக்கிறார். 3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை தோற்கடித்தார். முன்னாள் சாம்பியன்கள் பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் சோபியா கெனின் இடையிலான ஆட்டத்தில் அஸரென்கா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் தடையை கடந்தார்.

மரியா சக்காரி (கிரீஸ்), கோகோ காப், மேடிசன் கீஸ், டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் 5ம் நிலை வீராங்கனையான சபலென்கா தன்னை எதிர்த்து ஆடிய தெரசா மார்ட்டின் கோவாவை 6-1, 6-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Australian Open Tennis Tournament Sabalenka Great Game , Australian Open Tennis, Sabalenka played a great game
× RELATED டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஸ்வீடனுக்கு எதிராக இந்திய அணி ஏமாற்றம்