×

சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமுத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டுமெ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே தேனி ஊராச்சி ஒன்றியத்தில் உள்ள சீலையம்பட்டியிலி இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஜங்கால்பட்டி சாலை பி.டி.ஆர் கால்வாய் அருகே சமத்துவபுரம் கடந்த திமுக ஆட்சியில் 2010-11 ஆண்டு கட்டி முடித்து குறிப்பிட்ட சில பணிகள் நிலுவையில் இறுதி கட்டத்தை அடைந்திருந்தது. திமுக அரசின் பொது நலத்திட்டதின் வாயிலாக எல்லோரும் சமம் என்ற தத்துவ த்தை கொண்ட இந்த திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டதால் அனைவரிடத்திலும் வரவேற்ப்பை பெற்றது. இதில் 100 பேர்களுக்கு சமத்துவபுரம் வீடுகள் தருவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்ததை அப்படியே கிடப்பில் போட்டு 6 மாதம் கடந்த விட்டது.

தொடர்ந்து பலரின் கோரிக்கை ஏற்று சமத்துவபுரத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்வது சாவிகளை ஒப்படைத்து திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பயனாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறி இங்கு அனைத்து வீடுகளிலும் குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு கூலி வேலை உள்ளபட பலதரப்பட்ட வேலைகளுக்கு வெளியில் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த சமத்துவபுரத்தில் ரேஷன் கடை இருந்தும் எவ்வித பிரயோஜனமும் இல்லை மாறாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சீலையம்பட்டியில் உள்ள ரேசன் கடை யில் நிற்கும் கூட்டத்தில் நின்று காத்து கிடந்து பொருட்கள் வாங்கி தலைச்சு மையாக சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. சீலையம்பட்டியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சமத்துவ புரத்திற்கு கட்டாயமாக மினி பஸ் இய க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால் விரைவில் சமத்துவ மக்களின் போக்கு வரத்து நலன் கருதி அரசு நகரம் மற்றும் மினி பஸ்களாக கட் டாயம் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சமத்துவபுரத்தில் அவசர சிகிச்சைக்கு கூட ஆரம்பசுகாதார நிலையம் கிடையாது.

சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல 4 கிலோ மீட்டர் நடந்து சீலையம்பட்டிக்கு வந்து அங்கிருந்து பஸ் பிடித்து சின்னமனூர் சென்று சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி இருந்தும் செயல்பாட்டில் இல்லை 1 முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகளை சேர்க்க சீலையம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளிக்கு நடந் து செல்ல வேண்டிய கஷ்டநிலை உள்ளது. அதே போல் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா என பொழுது போக்கிற்கு இருந்தாலும் அதற்கான பொருட்கள் எதுவும் இல்லை. இதை விட பொதுமக்களுக்கு தேவையான அத்தியா வசியமான அடிப்படை தேவைகளுக்கான குடிநீர் முல்லைப் பெரியாற்றிலிருந்து கொண்டு இணைக்கப்பட வில்லை ,ஒரு லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலைத் தொட்டி அப்படியே செயல் படாமல் பொருட்காட்சியாக நின்று கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆழ்குழாய் மட்டும் அமைத்து தரைநிலை தொட்டி வைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீராகவும், கழிப்பிடம், துணிமணி கள் துவைக்க என பிறத்தேவைகளுக்கு பத்தும் பற்றாமல் உப்பு தண்ணீரையே வேறு வழி இன்றி பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் குடியேறியவுடன் குடிநீருக்கும், மின் தெருவிளக்குகள், சாலைகள், ரேசன்கடை, மினி மருத்துவமனை, மற்றும் சீலையம்பட்டிக்கு சென்று வர பஸ் வசதி என அனைத்து குறித்து பொதுமக்கள் கடந்த அதிமுக ஆட்சி யில் புகார்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் 10 ஆண்டுகளாக எடுக்காமல் கை விட்டு பராமரிக்காமல் விட்டு விட்டனர். தற்போது பராமரிப்பு என்பது இல்லாததால் ஒவ்வொரு தெருக்களிலும் சாலைகள் முழுவதும் பெயர்ந்து பள்ளங் களாக மாறி கிடக்கிறது, வீடுகளும் மழையால் நனைந்து உள்ளே ஒழுகி பழுதாகி கிடப்பதால் உடனடியாக பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உடனடியாக சமத்துவ புரத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயனாளி முத்துலட்சுமி கூறுகையில், ‘‘சாக்கடை வசதி இல்லை சாலை வசதி இல்லை குடிநீர் இல்லை தொட்டிகள் முழுவதும் காலியாக கிடக்கிறது, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. போக்குவரத்து வசதி இல்லாததால் எதுவுமே கிடை க்காத நிலையில் உயி ருக்கு பயந்த நிலையில் வாழ்ந்து வருகி றோம் என்றார். இது குறித்து காமராஜ் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் எங்களுக்கு அனைத்து வசதிகளும் கேட்டு புகார் மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆட்சி மாற்றத்தால் நம்பிக்கை கிடைத்துள்ளது அடிப்படை வசதிகள் உயிருக்கு முக்கியத்துவம் தரும் குடிநீர், தெரு விளக்குகள், சாலை வசதி போக்கு வரத்து, ரேசன்கடை செயல்படும் வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். மேலும் இந்த சமத்துவபுரத்தின் வளாகத்தின் நுழைவாயிலில் சமத்துவம் கண்ட பெரியார் சிலை வைக்கப்படவேண்டும் ஆனால் இது குறித்து கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித பயனும் இல்லை’’ என்றார்.

Tags : Seelayambatti Samatthupuram ,Chinnamanur , Basic facilities should be improved at Seelayambatti Samatthupuram near Chinnamanur: public demand
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி